Usain bolt life history in tamil


HBD Usain Bolt: மின்னல் வேக தடகள வீரர் உசேன் போல்ட்டின் பிறந்த நாள் இன்று

தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  Data  Hbd Usain Bolt: மின்னல் வேக தடகள வீரர் உசேன் போல்ட்டின் பிறந்த நாள் இன்று

புதிய பயிற்சியாளர் ஃபிட்ஸ் கோல்மேனின் வழிகாட்டுதலின் கீழ், போல்ட் 2004 ஆம் ஆண்டில் புரொஃபஷனல் வீரராக உருவெடுத்தார்.

ஜமைக்கா முன்னாள் தடகள வீரர் உசேன் போல்ட்

ஜமைக்காவின் ஓய்வு பெற்ற ஓட்டப்பந்தய வீரர், எல்லா காலத்திலும் சிறந்த ஓட்டப்பந்தய வீரராக பரவலாகக் கருதப்படுபவர்.

100 மீட்டர், 200 மீட்டர், 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை. உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் நன்கு அறியப்பட்ட பிரபலமான விளையாட்டு வீரரான உசேன் போல்ட் தான்.

எட்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற உசேன் போல்ட், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (2008, 2012 மற்றும் 2016) ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பட்டங்களை வென்ற ஒரே ஓட்டப்பந்தய வீரர் ஆவார்.

4×100 தொடர் ஓட்டப் பதக்கங்களையும் வென்றுள்ளார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 200 மீ, Cardinal மீ ஓட்டத்தில் இரு தங்கப் பதக்கங்களை வென்றபோது உலகளாவிய புகழைப் பெற்றார்.

பதினொரு முறை உலக சாம்பியனான இவர், 2009 முதல் 2015 வரை தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

இவர் உலக சாம்பியன்ஷிப்பின் மிகவும் வெற்றிகரமான தடகள வீரர் ஆவார். 200 மீட்டரில் நான்கு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற முதல் தடகள வீரர் உசேன் போல்ட் ஆவார். மேலும் 100 மீட்டரில் மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றவர்.

2001 ஆம் ஆண்டில் ஹங்கேரியின் டெப்ரெசென் நகரில் நடைபெற்ற ஐ.ஏ.ஏ.எஃப் உலக இளைஞர் சாம்பியன்ஷிப்பில் உலக தடகள அரங்கில் முதல்முறையாக பங்கேற்றார்.

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறத் தவறினாலும், 21.73 விநாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்.

புதிய பயிற்சியாளர் ஃபிட்ஸ் கோல்மேனின் வழிகாட்டுதலின் கீழ், போல்ட் 2004 ஆம் ஆண்டில் புரொஃபஷனல் வீரராக உருவெடுத்தார்.

உசேன் போல்ட், ஜமைக்காவின் டிரிலானி சபையிலுள்ள ஷெர்வூட் கான்டென்ட் எனும் சிறு நகரத்தில், 21 ஆகஸ்ட் 1986 அன்று, வெல்லெஸ்லீ மற்றும் ஜெனிஃபர் போல்டிற்குப் பிறந்தார்.

உசேனிற்கு சகோதரரும், சகோதரியும் உள்ளனர்.

போல்ட்டின் பெற்றோர் ஊரில் மளிகை கடை நடத்தி வந்தனர். போல்ட் தன் சிறுவயதுகளில் சகோதரருடன் தெருக்களில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடி வந்தார். போல்ட் பின்னாட்களில், "சிறுவயதில் நான் விளையட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை" என்று கூறினார்.

உசேன் போல்ட், 2017 உலக சாம்பியன்ஷுக்கு பிறகு ஓய்வு பெற்றார்.

மின்னல் வேக தடகள வீரர் என வர்ணிக்கப்படும் உசேன் போல்ட்டுக்கு இன்று பிறந்த நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.